பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.

11.

12.

பாண்டுரங்கர் தாலாட்டு

பண்டரி புரந்தனிலே பாண்டுரங்க யுைதித்துத் தொண்டரிடர் எல்லாம் துடைத்தவனே, கண்வளராய். - எத்திசை யும்புகழும் ஏகநாதர் தமக்குப் புத்தியுடன் வேலை புரிந்தவனே, கண்வளராய். சற்குணங்கள் வாய்த்த சக்குபா யானவட்கு கிர்க்குண மதையுரைத்த கிர்மலனே, கண்வளராய். போஸ்லர் விபவம் ஆஸ்கலம் தீர்த்தபின்பு ஆசை யுடன்மாவை அன்பாய்க் கிரகித்தவனே? சோளம் விதைக்கச் சுரைக்காய் அதில்காய்க்கச் சுரைநிறையக் கோதுமையைச் செய்தவனே,

கண்வளராய். சோகா மேளருடனே சோகமற ஆலயத்தில் ஏகாங் த மாக இருந்தவனும் தோனே? வேதியரும்விலகும் கீழ்ஜாதி பாராமல் பேதமற ஒன்ருய்ப்பூ ஜித்தவனே, கண்வளராய்.

சேரிதனில் பக்தருடைப் பாரியவள் கொட்டுதயிர்

ஊரில் மறையவர்க்காய் உடையில்காண் பித்தவனே? பக்தர் முகத்தடியைப் பகவானே, உன்முகத்தில் முற்றும் வகித்தஎன்றன் முகுந்தனும் தோனே? தாஸர்க்கு நெய்யைத் தலைமேல் சுமந்துவந்து தாஸரது கையால் தலையிலடி பட்டவனே? தாஸருக்குத் தொண்டாய்த் தாஸர் கனகமுடி தாசியின் கையில்கொடுத்த தன்யனும் தோனே?

11 -