பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 175

காது முரி, கழுத்துமுரி, ஜாக்கிரதை என்றும கவனமாய்ச் சேவகர் கத்திக்கொண் டிருக்கச் சொரணை இல் லாமலே சிலபேர் ஜனங்கள் சொகுசாக கையூட்டிக் குலுக்கிக்கொண்டிருப்பார். ஜடைக்குச்சு ராக்கொடி ஜம்பமாய் வச்சு . அதுமேலே பூச்சூட்டி அழகோடே கிற்க, அந்தச் சமயத்தில் வந்தான் குறவன். அந்தமான நகைதிருடிச் சந்துவழி ஒட அப்பவே கான்ஸ்டேபிள் தப்பாமல் புடிச்சு அந்த இன்ஸ் பெக்டரண்டைக் கொண்டுபோய் நிறுத்த அழகோடே இன்ஸ்பெக்டர் விசாரணைகள் செய்து அவன் இரு கைகட்டி ஸ்டேஷனுக் கனுப்பச் சுற்றி லும் இந்தப்படி வேடிக்கை கடக்க அப்பவே சுவாமியும் தெப்பத்தில் ஏற டப்பென்று அதிர்வெடிச் சத்தங்கள் கேட்க, அப்பவே கூட்டங்கள் எழுந்திருந்து சிற்க, படுத்திருந்த ஜனங்களெல்லாம் உந்திஎழுந் திருக்க உறங்கின ஜனங்களெல்லாம் உதறிஎழுந் திருக்க ஓடிவந்த ஜனங்களெல்லாம் எதிர்கின்று பார்க்க, அப்பவே ஒருசுற்றுச் சுற்றிக்கொண்டு வரவே, அழகோடே நீராழி மண்டபத்தில் ஏறி தளிகைகள் நைவேத்யம் விநியோகம் ஆகத் தெப்பத்தில் இறங்க எந்நேரம் செல்லும்! பல ஜாதி ஜனங்களும் ஒன்ருக நின்று, பலபல பாஷையும் பேசிக்கொண் டிருப்பார். காத்தாலே யேவந்து காத்துக் கிடந்தேன், கண்ணுள்ள சேவையைக் கானுவேன் என்று காதவழி நடந்துவந்தேன் கால்வலி யோடே.