பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதர் உத்ஸவம்

(காஞ்சீபுரத்தில் வரதராஜப் பெருமாளின் மகோத்ஸவம் வைகாசி மாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை மாலை பெருமாள் எழுந் தருளும் வாகனங்களே விடாயாற்றி வரையில் சொல்லும் இந்தப் பாட்டு, காஞ்சீபுரத்தைச் சார்ந்த இடங்களிலுள்ள ரீ வைஷ்ணவர்கள் விடுகளில் வழங்குகிறது.)

1. குட்டைகுளத்தில் பாசி

கோவிலில் ஆடுகிறவள் தாசி வடக்கே போனல் காசி - -

வரதர் உத்ஸவம்வை காசி.

2. பனமரத்தில் கள்ளு

பசங்கள் வாயிலே சொள்ளு கொல்லே விளைந்தால் எள்ளு

ஆழ்வார் பொறுக்கும் முள்ளு.*

8. சாதம் கொதிக்கிறது வடியும்;

கையிலே காரியம் படியும்; நெனேச்ச காரியம் முடியும்

வரதர்க் கேறும் கொடியும்.

  • ஆழ்வார் எழுந்தருளி மார்க்கங்களேச் சரிபார்த்து வருவது ஓர் ஐதிஹ்யம்.