பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி துதி (1) (பல்லவி) சக்தியே என்னிடத்தில் மெத்தக்குற்றம்

கண்டாற்போல்

சித்தம் புலம்புதற்கென் செய்குவேன்?

(அநுபல்லவி) கற்றபெரி யோரன்ருே உன் உற்றபூ சைக்குரியோர்புத்தி - . சற்றும்இல்லாத பேதைய ைேஅறிவேன்? (சக்)

... - (சரணங்கள்)

சங்கரி தேவி. சகஸ்ர தள லோசனி,

சந்தோஷ வீணு தாரிணி,

மந்த்ரம் அறியாத மட்டி ஜனங்களின்

அந்தகாரத்தைப்போக்கும் ஆனந்த ரூபிணி (சக்)

சுந்தரி, என்துயரம் எந்தநாளில் ஆறுமோ?

சுகமுற்றுச் சோகம்கொஞ்சம் மாறுமோ?

பந்துபோல் எழும்.மனம் பதித்துன்பதம் சேருமோ

சின்மயா னந்தரஸ்த் தன்மயமாய்த் தோன்றுமோ?

(ஆதி)

சங்கரி,உன் னிடத்தில்என் சங்கதி களைச்சொன்னேன்;

சங்கடம் தீரடிஎன் அன்னேயே! .

பொங்கரவம் பூண்டசிவ சங்கர ருடைபாரி -

செங்கமல நாயர்க்குச் சிங்கார சோதரி. (சக்)