பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சுந்தர சண்முகனார் 'சரி! அவ்வளவு ஆழ்ந்து கவனித்து அந்த வேலம்பாசிச் செடியில் என்ன கண்டீர்கள்? அன்பு கூர்ந்து அதனை எனக்கு அறிவிக்கலாமா? அறிவிப்பதில் தங்க்ளுக்குத் தடை யொன்றும் இல்லையே?" - 'எனக்குத் தடை யொன்றும் இல்லை. நீங்கள் கேட் பதற்கு ஆயத்தம் என்றால், நான் அறிவிக்கவும் ஆயத்தம். 'தெரிவிக்கும்படி நான்தானே விரும்பிக் கேட்கிறேன்! இனி நீங்கள் சொல்ல வேண்டியதுதான்!” 'சொல்லலாம். ஆனால்...... . ஆனால் என்ன? ஏன் என்னவோபோல் இழுக் கிறீர்கள்?" 'ஒன்றும் இல்லை. ஒரு பெண்ணிடம் அதைப் பற்றிச் சொல்லக் கூச்சமாயிருக்கிறது'. 'ஏன், சொல்லக்கூடாத செய்தியா?" "அப்படி யொன்றும் இல்லை. நாம் இளமையில் பள்ளிக்கூடத்தில் படித்த செய்திதான்!' 'அப்படியானல் சொல்லலாமே! எனக்கும் நினைவு படுத்தி மகிழ்விக்கலாமே!' © "சரி, தொடங்கி விடுகிறேன். நாம் இயற்கை அறிவியல் (Natural Science) பாடத்தில் மரஞ்செடி கொடி களைப் பற்றிப் படித்திருக்கிறோம் அல்லவா? அதில், பூக்களின் மகரந்தச் சேர்க்கையைப் பற்றிய பாடம் ஒரு சுவையான பகுதி'. ஆம். அதிலேயே தன் மகரந்தச் சேர்க்கை', 'பிற மகரந்தச் சேர்க்கை' என இரு பிரிவுகள் உண்டு'. சரிதான்! நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்களே!' 'தாவர இயலைப் பற்றி ஒரளவுதான் எனக்குத் தெரியும். நான் பள்ளி இறுதி வகுப்பு (S. S. L. C.)