பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 101 வரையிலுந்தான் இயற்கை அறிவியல் படித்தேன். பிறகு எம்.ஏ. பட்டம் பெறும் வரையிலுமே வேறு வேறு பாடங்கள்தான் எடுத்துக் கொண்டேன். தாவர அறிவியல்' எடுத்துக் கொள்ளவேயில்லை'. 'நான் அப்படியில்லை, எம்.ஏ. தேர்வுக்குத்தான் தமிழ் எடுத்துக் கொண்டேனே தவிர, மற்றபடி பி.ஏ.' தேர்வு வரை தனிச் சிறப்புப் பாடமாகத் தாவர இயல்தான் (Botany) எடுத்துப் படித்தேன். எனவே, இது பற்றிய விவரங்களை நான் ஏறக்குறைய அறிவேன்'. . 'மிகவும் நல்லது. விவரமாகச் சொல்லுங்கள்'. 'பூவின் ஆண் பாகத்தில் உள்ள மகரந்தப் பொடி பூவின் பெண்பாகத்துள் விழுந்து தொடர்பு கொண்டால் தான் பெண்பூ கருவுற்றுக் காய் காய்க்கும். இதற்குத்தான் "மகரந்தச் சேர்க்கை' என்று பெயர். பூவரசம் பூ, அகத்திப் பூ முதலிய இணையினப் பூ வகையில், ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் இருக்கும். இவ்வகைப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத்தான் தன் மகரந்தச் சேர்க்கை' என்று பெயர்.' ஒகோ, புரிகிறது!' 'அடுத்து, ஆமணக்கு, குப்பை மேனி, பூசணி, பாகல் முதலிய ஈரினப் பூஞ்செடி கொடி வகையில், ஒரே செடியில் ஒரே கொடியில் ஒரு பூ ஆண் பூவாகவும் மற்றொரு பூ பெண் பூவாகவும் இருக்கும். ஆண் பூவிலிருந்து பெண் பூவிற்கு வண்டு, தேனி முதலியவற்றின் மூலமாக மகரந்தச் சேர்க்கை ஏற்படும். இதற்குப் பிற மகரந்தச் சேர்க்கை' என்று பெயர். ஆண் பனை - பெண் பனை, ஆண் கோவை - பெண் கோவை முதலிய தனி ஓரின மரஞ்செடி கொடி’