பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 103 'மஞ்சள் குளித்து முகம் மினுக்கி - இந்த மாயப் பொடி வீசி கிற்கும் கிலை" - என்னும் பகுதி சுவையுடன் பொருள் செறிந்தது. மஞ்சள் பூசி முகத்தை மினுக்கி ஆடவரை மயக்கச் சொக்குப் பொடி வீசுவதாகப் பெண்கள் சிலரைப் பற்றி வேடிக் கையாகச் சொல்வதுண்டு. அந்தக் கருத்தை உள்ளடக்கி இருபொருள் அமையக் கவிமணி பாடியுள்ளார். சூரியகாந்தி மலரும் நிறத்துடன் மினு மினுப்பாய், காண்பவரை மயக்கு கிறதல்லவா? அவ்வளவு ஏன்? - 'வண்டின் வரவு எதிர்பார்த்து கிற்போம் - நல்ல வாசனை வீசி நிற்போம்' என்று மலர்களே கூறுவதுபோல வைத்துக் கவிமணியவர்கள் வேறோரிடத்தில் இதனை வெளிப்படையாய்க் கூறியுள்ளாரே! எல்லாம் சரிதானே அன்றில்? பேசாமல் இருக்கிறீர்களே! நீங்களும் சொல்லுங்கள்!' 'நான் உங்களை ஒன்று கேட்கவேண்டியிருக்கிறது; பிறகு கேட்கிறேன். இது சார்பாக இன்னும் சொல்ல வேண்டியதிருந்தால் நீங்கள் சொல்லி முடித்து விடுங்கள்!' 'சொல்லவேண்டியதா! இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டும். இருப்பினும், ஒன்றிரண்டு மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். இருள் சூழத் தொடங்கும் மாலை நேரத்தில் மலரும் மல்லிகைமுல்லை முதலான மலர்கள் மணமுடன் பளிச்சிட்ட வெண்ணிறமா யிருப்பதற்குக் காரணம், வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமே. இருட்டு வேளையில் வெண்ணிறந்தானே பளிச்சிட்டுக் காட்டிப் பார்ப்பவரைக் கவரும். இதுபற்றி மனோன் மணியம் என்னும் காவியத்தில் நீங்களும் படித்திருக்கலாமே! அதாவது: .