பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சுந்தர சண்முகனார் 1 . . கிசியலர் மலர்க்கு - வெண்மையும் கன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம் ஈயினம் அறிந்துவங் தெய்திடும்? அங்ங்னம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்!” என்று ஆசிரியர் சுந்தரம் பிள்ளை பாடியுள்ளாரே. ஒரு சிறு புல் கூட ஈக்களை மயக்கி அழைப்பதாக அதே நூலில், 'இதோடு இக்கரை முளைத்த இச்சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி அதன் சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை கலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனது பூம்பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ ...' என்று அழகாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஓர் அறிவு உடையதெனச் சொல்லப்படும் ஒரு சிறு புல்லும் காதல் வாழ்க்கை நடத்தும் அருமை பெருமையை அறியும்போது எவ்வளவு வியப்பாயிருக்கிறது பாருங்கள்! சரி, நான் சொல்லி முடித்துவிட்டேன். நீங்கள் ஏதோ என்னைக் கேட்கப் போவதாகக் கூறினீர்களே! இனிக் கேட்கலாம்.' 'நீங்கள் இதுவரை கூறிவந்த செய்திகளைக் கூர்ந்து கேட்டுக்கொண்டு வந்தேன். ஆனால், நீங்கள் செய்திகளைத் தெரிவித்து வந்த முறையில் ஒருதலைச் சார்பு இருந்ததை உணர்ந்தேன்' 'அது என்ன ஒருதலைச் சார்பு?’’ அதுவா? பெண் பூக்கள் ஆண் பூக்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக உங்களது பேச்சின் போக்கு குறிப்புக் காட்டுகிறது. அதாவது, பெண் பூக்கள்