பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விதத் திருமணம் 9 நெடும் பாறையில் செதுக்கிய சிற்பமேயானாள். அவள் எங்கே அசைவது - திரும்புவது - பார்ப்பது - பேசுவது? பழமொழியின்படி பார்க்கப்போனால் அவளைத்தான் நெருப் பென்று சொல்ல வேண்டும். இத்தகைய வைரம் பாய்ந்த உறுதி உள்ளத்தில் இருக்குமானால், ஒரு பெண் எங்கே சென்றால்தான் என்ன? யார் பக்கத்தில் அமர்ந்தால்தான் என்ன? சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை' என்று வள்ளுவர் கூறியுள்ள படி, உள்ளத்தில் உறுதி இருக்குமானால், சுவரோவியமாக இராமல், உயிரோவியமாக இயங்கி, ஆடவருடன் பேசவும் செய்யலாம், பழகவும் செய்யலாம். அதற்கும் ஓர் அளவு உண்டுதானே! ஆனால் அந்த இளைஞரால் கண்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கண்கள் அவருக்கு முதலில் நினைவுறுத்தின-அவர் பொருட் படுத்தவில்லை. அவளைப் பார்க்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கெஞ்சின-அவர் புறக்கணித்துவிட்டார். பின்னர், பார்க்கத்தான் வேண்டும் என்று அடம்பிடித்துப் பார்த்தேவிட்டன. அதாவது, அவருக்கு முதலில் இருந்த உறுதி பிறகு இல்லை. நேரம் ஆக ஆகப் பக்கத்தில் இருப்பவளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. பலரைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட கண்கள் பரபரப்புக் காட்டியதால் இடைவிட்டு இடைவிட்டுத் தலையைத் திருப்பி அவளைப் பார்க்கலானார். ஆனால் ஒருமுறைகூட அவள் பார்க்கவேயில்லை. - பக்கத்தில் ஒரு தங்கத் தளிர்மேனி இடம்பெற்றிருப்பதை ஆர அமர அகங்குளிரக் கண்ட அந்த இளைஞருக்குப் பேச வேண்டும்போல் தோன்றியது. பக்கத்தில் தன்னைப் போலவே ஒர் இளைஞர் இருந்திருந்தால் எவ்வளவோ