பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விதத் திருமணம் 111 காதலியும் பொய்கையில் காதல் விளையாட்டு நடத்துவ தாகவும், அந்தக் காட்சி படம்பிடிக்கப்படுவதாகவும், கருதிக் கொண்டு மக்கள் கும்பல்கூடிக் கூச்சல் போடத் தொடங் இனர். நல்ல வேளையாக, புகைப்படக்காரர்கள் அன்றிலையும் அறவணனையும் இன்னும் படம் எடுக்க வில்லை. அதற்குள் அன்றிலும் அறவணனும் விழுந்தடித்துக் கொண்டு கரையேறி விரைந்து நடக்கத் தொடங்கினர். நாங்கள் சினிமாக்காரர்கள் அல்லர், உங்களைப் போலவே மகாபலிபுரம் பார்க்க வந்தவர்கள் என்று அறவணன் தெரிவித்ததும் மக்கள் விலகி விட்டனர். அறவணன், பின்னால் வந்துகொண்டிருந்த அன்றிலைத் திரும்பிப் பார்த்தார். பின்னால் அவளைக் காணாததால் திடுக்கிட்டார். ஆனால் அன்றிலோ, அறவணனுக்கு முன்னால் வெகு விரைவாக நடந்துகொண்டிருந்தாள். இதுபோன்ற நேரத்தில் ஆண்களினும் பெண்களின் நடையில் விரைவு மிகுதியாகிவிடும் போலும் முன்னால் விரைந்து சென்று கொண்டிருந்த அன்றிலை அறவணன் மிக விரைந்து சென்று அடைவதற்கும், அப்போது சென்னைக்குப் புறப் படத் தயாராகிக்கொண்டிருந்த பேருந்து வண்டியில் அன்றில் கால் வைத்து ஏறுவதற்கும் சரியாயிருந்தது. அன்றிலைத் தொடர்ந்து அறவணனும் அந்த வண்டியில் ஏறிக் கொண்டார். பல்வேறு மக்களையும் சுமந்து கொண்டு பயணம் செய்து பேருந்து வண்டியானது சென்னையை நெருங்கிச் சென்று கொண்டிருந்தது. அறவணன் இறங்குவதற்கு முன்பே, குறிப்பிட்ட ஒரிடத்தில் முன்னதாக அன்றில் இறங்கிக்கொண்டாள். கண்களால் கருத்து அறிவித்துக் கொண்டு தலையசைப்பால் இருவரும் விடைபெற்றுக் கொண்டனர். தமக்குரிய இடம் வந்ததும் அறவணனும் இறங்கிக் கொண்டார்.