பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 113 i 1 மகாபலிபுரம் போய்வந்தபின் பத்து நாள் கழித்து, அறவணனுக்கு அவர் தந்தை முருகப்பனிடமிருந்து கடிதம் வந்தது. 'அம்மாவுக்கு உடம்பு சரியாயில்லை. இங்கே சில ஏற்பாடுகள் செய்தாகவேண்டும். அதனால் உடனடியாகய் புறப்பட்டு ஊருக்கு வருக!' என்று முருகப்பன் எழுதி யிருந்தார். மறுநாள் அறவணன் புகைவண்டி மூலமாகக் காரைக்குடிக்குப் புறப்பட்டார். புகைவண்டி விழுப்புரம் சந்திப்பில் வந்துநின்றது. அங்கே சிற்றுண்டி அருந்துவதற்குப் போதிய அளவு நேரம் வண்டி நிற்கும். அறவணன் வண்டியிலிருந்து இறங்கிப் புகைவண்டி நிலையச் சிற்றுண்டி விடுதிக்குச் சென்றார். அங்கே அப்போதுதான் ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்த அன்றிலை எதிர்பாராது கண்டு வியந்தார்-மகிழ்ந்தார்உரையாடத் தொடங்கினார். ஒ! நீங்களும் ஊருக்குப் போகிறீர்களா: எதிர்பாராது உங்களைக் கண்டது பற்றி மிக்க மகிழ்ச்சி! மகாபலிபுரத்தில் பழகியதற்குப்பின் பத்து நாள் அளவிலேயே மீண்டும் சந்தித்து விட்டோமே! நான் எங்கள் ஊராகிய காரைக் குடிக்குச் செல்கிறேன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை; சில ஏற்பாடுகள் செய்யவேண்டும். உடனே புறப்பட்டு வருக' என்று அப்பா எழுதியிருந்தார். அதனால் புறப்பட்டுச் செல்கிறேன். நீங்கள் என்ன-உங்கள் ஊராகிய திருச்சிக்குத் தான் செல்கின்றீர்களா? அல்லது வேறிடத்துக்குச் செல்கின்றீர்களா? ஏதேனும் சிறப்புச் செய்தி உண்டா?’’ & & 1. ஏன் பேசாமல் இருக்கிறீர்கள்? உங்கள் முகம் வருத்தமாய்க் காணப்படுகிறதே! ஏதேனும் துயரச் செய்தி