பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சுந்தர சண்முகனார் வந்ததா? ஊரில் யாருக்கும் ஒன்றும் இல்லையே? உங்கள் தாய் தந்தையர் நலம் தானே?" 4 & p : هیستمهاجع هوه 'ஏன் மறுபடியும் பேசாமல் இருக்கிறீர்கள்? என்மேல் ஏதேனும் வருத்தமா? சினமா? தயவுசெய்து சொல்லுங்கள்' 'தயவு செய்ய வேண்டியது நான் இல்லை-நீங்கள் தான். தயவு செய்து என்னைத் தனியே விட்டு இந்த இடத்தினின்றும் அகன்று விடுங்கள். இனி என்னிடம் எங்கும் என்றும் எதுவும் பேசவே வேண்டாம். என்னோடு இனி என்றும் எங்கும் எந்தத் தொடர்பும் கொள்ளவே வேண்டாம். தயவுசெய்து போய்விடுங்கள்.' 'போய்விடுகிறேன். ஆனால், உங்களோடு பேசியோதொடர்பு கொண்டோ எனக்கு ஆகவேண்டியது ஒன்று மில்லை. ஏதோ, பழகியவர்களை வழியில் பார்த்து விட்டோமே! பேசாமல் போவது பண்பன்று என்ற மனித நாகரிகத்திற்காகத் தங்களிடம் பேசினேன். வேறொன்று மில்லை." - 'என்னிடம் இனி எந்த நாகரிகத்துடனும் நடந்து கொள்ள வேண்டியதில்லை. போகலாம்.' போகத்தான் போகிறேன். ஆனால், நீங்கள் எதிர்பாராது என்னிடம் இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் என்ன? என்னிடம் ஏதேனும் தவறு உண்டா? தெரிவித்தால் திருத்திக் கொள்ளலாம் என்று கருதியே இவ்வளவு கெஞ்சிக் கேட்கிறேன். தவறு இருப்பின் தயை கூர்ந்து அறிவிக்க வேண்டுகிறேன். அதைக் கேட்டுவிட்டு உடனே ஒடி விடுகிறேன். 'உங்கள்மேல் நான் தவறு சொல்ல என்ன இருக்கிறது? என் தந்தையாரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. இதோ