பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சுந்தர சண்முகனார் குடும்பப் பெருமையை மறந்த குழந்தாய் அன்றிலே! அப்பா ஒருவர் இருக்கிறார்.அண்ணன் ஒருவன் இருக்கிறான்அவர்கள் இருவரும் அறிந்தால் மானம் பறிபோயிற்றே என்று மனம் வெம்பி வெயிலில் அகப்பட்ட புழுப்போல் துடிப்பார்களே என்பதை உணராது மறந்து மானக் கேடாய் நடந்து கொண்ட மட அன்றிலே! இனியும் உன் திருமணத்தை ஒத்திப்போட முடியாது. உன்னைக் கேட்டும் ஒன்றும் செய்யமுடியாது. நான் இப்படி எழுதுவது ஒன்றும் புரியவில்லையா உனக்கு? இல்லையில்லை. புரிந்திருக்கும் - நன்றாகப் புரிந்திருக்கும். நீ ஆடிய நாடகம் இந்நேரம் உன் நினைவுக்கு வந்துவிட்டிருக்கும். அதுதான் - மகாபலி புரத்தில் மாற்றான் ஒருவனோடு நீ நடத்திய சினிமாக் காட்சியை-காதல் களியாட்டக் காட்சியைக் கண்டு களித் தவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் நம்மவர் - நமக்கு வேண்டியவர். அவரை உனக்குத் தெரியாது; ஆனால் அவருக்கு உன்னைத் தெரியும். நீ மாமல்லபுரத்தில் உன் ஆசை நாயகனுடன் கூத்தடித்த அன்றைக்கு அவரும் அவ்வூருக்கு வந்திருக்கிறார். நீ நுகர்ந்த சிருங்கார ரசம்' அவர் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. அவர் மகாபுலி புரத்திலிருந்து சென்னை சென்று சில வேலைகளை முடித் துக்கொண்டு மூன்று நாளுக்கு முன் நம்முருக்கு வந்தார். கடைத்தெருவில் என்னைத் தற்செயலாகக் கண்ட அவர் வாயிலாக உன் திருவிளையாடல்களை நான் தெரிந்து கொண்டேன். நான் அருமை பெருமையுடன் வளர்த்த அன்றிலே! என் கண்மணியினும் பெரிதாய்ப் போற்றி வளர்த்த பெண் மணி அன்றிலே! நான் ஆசையுடன் சூட்டி அழைத்து வரும் அழகு பெயரைக் கொண்ட அன்றிலே! இன்னொன் றையும் தெரிவித்து விடுகிறேன். உன்னை மகாபலிபுரத்தில்