பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சுந்தர சண்முகனார் வெளியில் நடமாடவே எனக்கு நாணமாயிருக்கிறது. ஒன்றுமட்டும் உனக்கு உறுதியாகச் சொல்லிவிடுகிறேன். இனி நீ உன் கள்ளக் காதலனை அறவே மறந்துவிட வேண்டியதுதான். எந்த வழியிலும் அவனை நீ பெற முடியவே முடியாது. அதற்கு நான் ஒத்துக் கொள்ளவே மாட்டேன். இந்தப் பாதை எனக்கு அறவே பிடிக்காது. எனவே, உனக்கு வேறு மாப்பிள்ளை முடிவு செய்து விட்டேன். நீ மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். வேறு வழியே இல்லை. இன்னொரு செய்தியையும் நான் எண்ணிப் பார்க்காமல் இல்லை. அதாவது, நீ உன் கள்ளக் காதலனுடன் உடல் உறவு கொண்டுவிட்டிருந்தால், அவனை விட்டு வேறொரு வனை மணந்துகொள்ளின், அது கற்பு கெட்ட வேசியரின் செயல் ஆகாதா? முதலில் ஒருவனோடு கள்ளத்தனமாக உடல் உறவு கொண்டுவிட்டால் பிறகு அவனையே மணந்து கொண்டு இறுதிவரையும் அவனுடன் இல்லறம் நடத்துவதே ஒரளவாயினும் கற்புடைய செயலாகும் - என்றெல்லாம் நான் கருதிப் பார்க்காமல் இல்லை. இந்த நிலையில், கள்ளக் காதலன் ஒருவனோடு கலந்து பழகியுள்ள உன்னை வேறொருவனுக்கு மணம் செய்து வைப்பது எவ்வாறு பொருந்தும்? இதற்கு என் மனம் எப்படி உடன்பட்டது? என் அன்பிற்கு உரிய அன்றிலே! உன்மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கையை இங்கே சொல்லிவிடுகிறேன். என் மகள் ஒருவனிடம் காதல் கொண்டிருப்பினும், திருமணம் ஆவதற்கு முன்பு, ஒருபோதும் அவனுடன் "உடல் உறவு கொள்ளவே மாட்டாள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை பொய்த் திருக்காது என்றே எண்ணுகிறேன். நீ அவனுடன் உள்ளத்தால் உறவு கொண்டிருந்தாலும், 'உடல் உறவு' மட்டும் கொண்டிருக்க மாட்டாய் என்றே கருதுகிறேன். நீ