பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சுந்தர சண்முகனர்ர் $ 2 அன்றில் பெற்றோரால் வீட்டில் அன்போடு வரவேற்கப் பட்டாள். அவள் அயலான் ஒருவனோடு பழகியது அவள் தந்தை மாசிலாமணிக்குத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. மனைவிக்கும் தெரிவிக்காமல் அவ்வளவு மறைபொருளாக அந்தச் செய்தியை அவர் வைத்துக் கொண்டிருந்தார். அதனால், வழக்கம்போல் அன்றிலை அன்புடனும் குளிர்ச்சி யுடனும் நடத்தினார். அன்றிலும் ஒன்றும் அறியாதவள் போல் இயற்கையாக நடந்துகொண்டாள். . அன்றிலின் திருமண ஏற்பாடு ஆர்வமுடன் செய்யப் பட்டுக்கொண்டிருந்தது. முன்பு ஒரு முறை பெண் பார்க்க வந்து, அன்றிலின் அண்ணன் இளந்திரையனால் தாக்கப் பட்டு அடிவாங்கிக் கொண்டு போன மாப்பிள்ளை வீட்டார் அந்தப் பகைக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக, நாடகங் களில் வரும் வில்லன்' போல் செயல்பட்டு, அனறிலின் திருமண ஏற்பாட்டைக் கெடுக்க எவ்வளவோ தீய முயற்சிகள் செய்து பார்த்தார்கள். அவற்றையெல்லாம் மாசிலாமணி முறியடித்துப் புறங்கண்டு வென்று ஏற்கனவே தாம் முடிவு செய்த மாப்பிள்ளை வீட்டாருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆவன செய்தார். திருமணத்திற்கு முன் வழக்கமாக நடைபெறும் கைத்தாம்பூலம்’, 'பரியம்’ முதலிய முன்னுறுதிச் சடங்குகள் எல்லாம் முறையே முடிவு பெற்றன. திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திருமண அழைப்பிதழும் அச்சடிக்கக் கொடுக்கப் பெற்றுவிட்டது. ஆம்! 'திருமணம் தெய்வ உலகிலேயே முடிவு செய்யப் பட்டுவிடுகிறது - என்பதாக ஒரு கருத்து பலராலும் சொல்லப்படுவது வழக்கம். இந்தக் கருத்து சரியா? ஒர் ஆண்மகன் பிறக்கும்போதே அவனுக்குக் குறிப்பிட்ட மனைவியும், ஒரு பெண்மகள் பிறக்கும் போதே அவளுக்குக்