பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சுந்தர் சண்முகனார் எத்தனையோ இடங்களில் மாப்பிள்ளை பார்த்துக் களைத்துப் போவதுண்டு, ஒரு பிள்ளைக்கு எத்தனையோ இடங்களில் பெண் பார்த்துச் சளைத்துப் போவதுண்டு. இந்த நிலைமை ஆண்டுக் கணக்கில் நீடிப்பதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம், சமுதாயத்தில் திட்ட வட்டமான "திருமணக் கொள்கைகள் இல்லாமையே! என்று திருந்துமோ இந்தச் சமுதாயம்? காதல் திருமணங்களைப் பொறுத்த வரையில், நிறை வேறாமல் நின்றுபோனவையே மிகுதி. காதலில் தோல்வி கண்டவர்களே மிகப்பலர்; வெற்றி கண்டவர்கள் ஒரு சிலரே! பொருத்தமான காதலாயிருந்து, அதுவும் நிறை வேறி, பிறகு என்றும் பிரிவினை ஏற்படாமல் அன்புடனும் இன்புடனும் நின்று நிலைத்து நீடித்திருக்குமாயின் அதனைத் தெய்வக் காதல்’ எனலாம். அத்தகைய காதலர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்குக் கொடுத்து வைத்தவர்களே. - இத்தகைய உலகச் சூழலில் அன்றிலின் நிலை எத்தகையதோ? அவள் கொடுத்து வைத்தது எவ்வளவோ? அவளுடைய தந்தையாரால் தேர்ந்தெடுக்கப் பெற்ற மாப்பிள்ளை யாரோ? அன்றிலின் படிப்புக்கு ஏற்ற அறிஞனாய் இருக்கவேண்டுமே! அன்றில் பார்க்கும் அலு வலுக்கு ஏற்ற அலுவல் பார்க்கும் ஆடவனாய் இருக்க வேண்டும், - . ஒன்றிய உள்ளத்திற்குப் பெயர் போனவை அன்றில் பறவைகள். அந்த இனத்தின் பெயரைச் சூட்டிக் கொண் டுள்ள மணமகள் அன்றிலுக்கு, அவளோடு ஒன்றிய உள்ளம் கொண்டு ஒப்பற்ற ஆண்மகனாய்த் திகழக்கூடிய ஒருவன் மணமகனாய் வாய்க்கவேண்டுமே! இப்போது வாய்த்திருப் பவன் எவனோ?