பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 11 § { 2 3 'ஒகோ, நானும் சென்னைக்குத்தான். ' "எங்கேயாவது போங்கள்'. 'நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்?' என்று ஆர்வத்துடன் கேட்ட இளைஞருக்கு, சென்னைக்கு என்ற ஒரு சொல் மட்டுந்தான் நல்ல பதிலாகக் கிடைத்தது. அதிலும், முகத்தைப் பார்த்துக் கேட்ட இளைஞருக்கு, எதிர் தரப்பிலிருந்து முகத்தைப் பாராமலேயே பதில் வந்து விட்டது. இந்த நிலைமைக்கே இளைஞர் மிகவும் கலங்கிப் போய்விட்டார். அடுத்து இன்னொன்றை எதிர்பார்த்தார்; அதிலும் ஏமாற்றம். அதாவது, சென்னைக்கு என்ற பதிலைத் தொடர்ந்து, நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று தன்னை அவள் கேட்பாள் என்று எண்ணினார். இது, பயணஞ் செய்யும்போது இயற்கையாய் நிகழக்கூடிய ஒன்றே. அதாவது, ஒருவரை யொருவர் எங்கே போகி lர்கள்! என்று கேட்டுக்கொள்வது உலகியல். ஆனால் அவள் அப்படியொன்றும் கேட்கவேயில்லை. சென்னைக்கு" என்ற பதிலோடு அறுத்து நிறுத்திக் கொண்டாள். கேட்பாள்- கேட்பாள் என்று மேலும் சிறிதுநேரம் இன்ளஞர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவள் கேட்கவேயில்லை. இது இளைஞருக்கு இரண்டாவது அடி. அதன் பிறகு தானாகப் பல்லை யிளித்துக்கொண்டு, நானும் சென்னைக் குத்தான் வருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதை அவள் புறக்கணித்துப் பேசிவிட்டாள். இது இளைஞருக்கு அடிமேல் அடி - மூன்றாவது அடி. ஒ அப்படியா நீங்களும் சென்னைக்குத்தான் வருகிறீர்களா? மிகவும் நல்லது - என்று ஏதாவது அவள் சொல்லிவைப்பாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அவள் எங்கேயாவது போங்கள் என்று கூறி உதட்டை மடித்துக்கொண்டிருந்த காட்சியைக் கண்ட இள்ைளுர் செத்தார் - செத்தார் - செத்தே போய்