பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சுந்தர சண்முகனார் போது ஆண்வாடையே பட்டறியாதவளோ? ஒருவேளை இப்படியிருக்கலாமோ? அதாவது, கள்ளங் கபடின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகிக் கொண்டிருந்தபோது, ஆடவர் எவரேனும் அற்பத்தனத்திற்கு அடிகோலினரோ? அதனால் வெறுப்படைந்து, ஆடவரோடு பேசுவதையும் பழகுவதையும் அறவே நிறுத்திவிட்டாளோ? அல்லது இப்படியும் இருக்கலாமோ? அதாவது, இவள் ஆடவரோடு சேர்ந்து கல்வி பயிலாமல் பழகாமல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும், மகளிர் கல்லூரியிலுமே படித்திருக்கலாமோ? கல கல என்றிருக்கும் பெண்களை நம்பலாம்; மச மச' என்றிருக்கும் பெண்களை நம்பக் கூடாது என்று உலக வழக்கில் சிலர் சொல்வது உண்டு, அந்த இரண்டு வகை யினருள் இவள் எந்த இனத்தைச் சேர்ந்தவளோ? ஆனால் இந்தக் கருத்தை முற்றிலும் ஒத்துக் கொள்வதற்கும் இல்லை. இதற்கு எதிர்மாறாக நிகழ்வதும் உண்டு. இரண்டொருவரிடம் கண்ட அனுபவத்தைக் கொண்டு எல்லோரைப் பற்றியும் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது. தமது குட்டை அனுபவத்தைக் கொண்டு உலகத்தை அளக்கக் கூடாது. எனவே, அன்றில் எப்பேர்ப் பட்டவளோ? 'திருச்சியிலிருந்து சென்னைவரை தனியாகப் பயணஞ் செய்ய ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது? ஒருவேளை சென்னைக் கல்லூரியில் படித்தவளோ? படித்துக் கொண்டிருந்தபோது. திருச்சிக்கும் சென்னைக்கும் தனியாகவே பலமுறை பயணஞ் செய்து செய்து பழக்கப் பட்டவளோ? பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சா தல்லவா? பனையோலைகளின் சலசலப்பைப் பலமுறை கேட்டுக் கேட்டுப் பழக்கப்பட்டிருக்குமே! ஆனால் இவள் தந்தை சொன்னதை எண்ணிப் பார்த்தால், அவரும் மகளுக்குத் துணையாய் உடன்வர இருந்ததாகத் தெரிகிறது.