பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 17 கோவையிலிருந்து திடீரெனத் தந்தி வந்ததால் அவர் அங்கே செல்லவேண்டி, அன்றிலை மட்டும் தனியாகவாவது உடனடியாகச் சென்னைக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் என்னவோ? சென்னையில் ஏதேனும் வேலையில் இருக் கிறாளோ என்னவோ! அதனால், பணத்தைப் பார்க்காது ஒரளவு வசதியாக இரண்டாவது வகுப்பில் பயணஞ் செய்து குறித்த காலத்தில் சென்னையை அடைய முயல்கிறாள். போலும். சரி சரி, யார் எப்படிப் போனால் தான் நமக்கென்ன!' - என்றெல்லாம் பலவாறு எண்ணிக் கொண்டிருந்தார் அந்த இளைஞர். அவருக்கு அலையலையாக இவ்வளவு எண்ணங்கள் எழுந்ததற்குக் காரணம் அந்த அன்றில்' என்னும் கருத்தைக் கவரும் புது வகைப் பெயரே. அன்றிலோ அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தாள். அவள் கைகளை அணிசெய்து கொண்டிருப்பது, திருக் குறளுக்கு ஃபிரான்சிசு வொய்ட் எல்லிசு (Francis Whyte Ellis) என்னும் ஆங்கிலேயர் ஆங்கில மொழியில் எழுதியுள்ள திருக்குறள் எல்லீசு கம்மென்டரி (Tirukkural Ellis Commentary) என்னும் உரை விளக்க நூலாகும்.