பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 19 வேண்டும் - காரைக்குடி நிலையத்தில்தான் வண்டியேறி யிருக்க வேண்டும் - பெயருக்குப் பின்னால் போடப் பட்டிருப்பதற்கேற்ப, இவரை ஓர் எம்.ஏ. படித்தவர் என்று சொல்லலாம். அதற்குரிய அறிகுறி தெரிகிறது. எனவே, அறவணன் இவர்தான் - இவரே அறவணன். அறவணன் என்ற பெயரைத் தமிழ் படித்தவர்களே நன்கு அறிவர். தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் மணிமேகலையும் ஒன்று. மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாறு கூறுவதால் அந்தக் காப்பியம் மணிமேகலை என அவள் பெயராலேயே அழைக்கப்படுகிறது. அந்நூலில் 'அறவண அடிகள் என ஒருவர் பேசப்படுகிறார். அவர் ஒரு புத்த சமயத் துறவி. மணிமேகலைக்கும் அவள் தாய் மாதவிக்கும் அறம் உரைக்கிறார்; சமய உண்மைகளை விளக்குகிறார். அவரைப் பெரிய ஆசானாக மணிமேகலை மதிக்கிறாள். - வணங்குகிறாள் - வாழ்த்துகிறாள். இவ்வித மாக அக்காவியத்துள் அறவணர் ஒர் உயர்ந்த உறுப்பாகப் படைக்கப்பட்டுள்ளார். மக்கட் பண்பின் உயர் எல்லைக் கோட்டில் நின்ற அந்த நல்லோரின் பெயரை யாரும் வைத்துக் கொள்வதில்லை. அதற்குக் காரணம்: அவரைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாத அறியாமையோ - அல்லது - அவர் பெயரை வைத்துக் கொண்டால் அவர் போல உயர் பண்புகள் அமையப் பெற்றவராயிருக்க வேண்டுமே என்ற அச்சமோ? தம் பெயரின் பொருளே தெரியாத மக்கள், பெயருக்கேற்ப வாழ்வதெங்கே? எனவே, எனக்குத் தெரிந்த வரைக்கும், அறவ்ணன் என்ற பெயரில் இவர் ஒருவர்தான் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பெயர் இவருக்கு எப்படி வந்தது? - இவர் பெற்றோர் இவருக்கு அறவணன் என்று பெயர் வைத்திருப்பாரா? அல்லது அவராகவே இடையில் வைத்துக்