பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சுந்தர சண்முகனார் உயிர்த்தோழி, அங்கு வந்தமர்ந்து மணமகள் நமக்குத்தான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் அரசகுமாரர் களின் ஊர், பேர், கல்வி, செல்வம், வீரம், இன்னும் பல தகுதி. திறமைகளை அவளுக்கு விளக்குவாள். அதாவது, இவர் வானத்தை வில்லாக வளைப்பார் - அவர் மணலைக் கயிறாகத் திரிப்பார் - அதோ இருக்கிறாரே அவர் சல்லடை யில் தண்ணிர் கொண்டு வருவார்' என்றெல்லாம் ஏதேதோ இல்லதும் உள்ளதுமாகச் சொல்லிவைப்பாள். அப்படி யெல்லாம் அரசகுமாரர்கள் தங்களைப் பற்றி முன்கூட்டி விளம்பரப்படுத்தி யிருப்பார்கள். அவ்வளவும் கேட்டறிந்த பின்னர் அரசகுமாரி தனக்குப் பிடித்தமான ஒருவர் கழுத்தில் மாலையிடுவாள். அதன் பின்னர் திருமணம் நிகழும், மற்ற அரச குமாரர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இன்னொரு இடம் போய்ப் பார்ப்பார்கள், இதற்குப் பெயர் தான் சுயம்வரம். இந்தச் சுயம்வர முறை மிகவும் மானக்கேடான ஒரு முறையல்லவா? மணமகள் ஒருவனுக்கு மாலையிட்ட பின்பு, மற்ற அரசகுமாரர்களின் முகம் எப்படியிருக்கும் அதன் பிறகும் அவர்கள் உயிரோடு உலவுகின்றார்களே! சோறும் வேறு தின்னுகிறார்களே! அதுதான் வியப்பு அதற்குமேல் வியப்பினும் வியப்பு, அவர்கள் அந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு வேறொரு சுயம்வரத்திற்குச் செல்வதாகும். இந்தச் சுயம்வரத்திற்கும், இந்தக் காலத்தில் நடக்கும் இன்டர்வியூ முறைக்கும் என்ன வேறுபாடு: ஒரு வேலைக்குப் பலர் விண்ணப்பம் அனுப்புகின்றனர். அதில், தங்கள் படிப்பு, பட்டம், தகுதி, திறமை, அனுபவங்களை வானளாவக் கொட்டிக் குவிக்கின்றனர். அவர்களுள் இருபது அல்லது முப்பது பேரை நேரில் அழைத்துக் கேள்வி பல கேட்டு உலுக்குகின்றனர் தேர்வுக் குழுவினர். ஒருவர் தேர்ந் தெடுக்கப் படுவார். அவருக்குத் தகுதி இருந்தாலும்