பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 27 இருக்கும் - இல்லாமலும் போகும். மற்றவர்கள் போக்கு வரவு - மற்ற படிச்செலவு என்ன ஆயிற்று என்று கணக்குப் பார்த்து வெம்பி வெதும்பிப் புழுங்குவர். 'இந்த முறை நன்றாக இருக்கிறதா? பலரையும் அழைத்துத் தொல்லை கொடுக்க வேண்டுமா? வேலைக்காக அழைப்பவர்கள், எல்லோருக்கும் போக்குவரவு படிச்செலவு கொடுக்கட்டுமே. மலிந்தால் தானாகக் கடைத்தெருவுக்கு வரும் என்ற முறையில், பட்டதாரிகள் பலர் இருப்பதால், அவர்களை அவர்கள் செலவில் அழைத்து ஆட்டிப் படைப்பதா? சிலவிடங்களில், விளம்பரமும் இன்டர்வியூவும் ஒரு நாடகமாகப் போய்விடுவதும் உண்டு. இந்தச் சடங்கு தேவையில்லையே. தங்களுக்கு வேண்டியவரா யிருக்கிற அல்லது நம்பிக்கைக்கு உரியவராயிருக்கிற ஒருவரை நேரடி யாக அமர்த்திக் கொள்ளலாமே. தம்மிடம் நேர்மை யிருந்தால், யார் எது வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டு போகட்டுமே" - என்றெல்லாம் சில பட்டதாரிகள் எண்ணி, வெறும்வாயை மென்று கொண்டிருந்தனர். அப்போது பணியாள் ஒருவர் வந்து, "இங்கே அன்றில் என்ற பெயர் உடையவர் யார்? அவரை இவர் பார்க்க வேண்டுமாம்' - என்று கேட்டுக்கொண்டே ஒரு பெரியவரை அழைத்து வந்தார். அன்றில் எழுந்து, அந்தப் பெரியவரிட மிருந்து ஒரு பொருளை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டாள். அந்தப் பெரியவர் போய்விட்டார். ஏதேனும் நற்சான்றிதழை (சர்டிபிகேட்) தங்கியிருக்கும் வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருக்கலாம். அதனை எடுத்து வந்து வீட்டுப் பெரியவர் கொடுத்திருக்கலாம். .** அன்றில் என்ற பெயரைக் கேட்டதும், அங்கு இருந்தவ ரிடையே சிறுசிறு முணுமுணுப்பு ஏற்பட்டது. அங்கும் இங்குமாக ஒருவரோடொருவர் ஏதேதோ பேசி மகிழ்ந்தனர்.