பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 29 பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவரிடையே தன்னை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது புறக்கணித்த அறவணன் அவளுக்கு இமயத்தின் எவரெஸ்டாக உயர்ந்துவிட்டார். நேற்றுப் புகைவண்டியில் வந்த போது அவருடன் சரியாகப் பேசாமைக்கு வருந்தினாள். அவர் ஒரு முறையாவது தன்னைப் பார்க்கமாட்டாரா என்று ஏங்கித் தவங் கிடந்தாள். அவரது அசையா உறுதியை அறிந்தபோது அவளுக்கு அழுகை வந்துவிடும்போல் இருந்தது. அவருடன் பேசவேண்டும் - பழகவேண்டும் என்று அவாக்கொண்டாள்; அதற்காகத் தக்க வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். பத்து மணியானதும், தேர்வுக் குழுவினர் முன்பு ஒவ்வொருவராக அழைத்துச் செல்லப்பட்டனர். என் னென்னவோ கேள்விகள் கேட்கப்பட்ட பின்னர் அவரவரும் அவ்விடத்தினின்றும் அகலத் தொடங்கினர். அன்றிலும் அறவணனும் அடுத்தடுத்து அழைக்கப் பட்டதால், அவர்கள் அக்கட்டடத்தைவிட்டகன்றதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. கல்லூரியின் வெளிவாயிலில் எதிர்பாராவிதமாய் இருவரும் எதிரும் விழியுமாகப் பார்த்துக் கொள்ளும்படியான தவிர்க்கமுடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இதுதான் தக்க நேரம் என்றுணர்ந்த அன்றில் அறவணனை நோக்கி, "நாம் இருவரும் இங்கேதான் வரப் போகிறோம் என்பது, நேற்றுப் புகைவண்டியில் வந்தபோது தெரியாமல் போயிற்றே - என்று பேச்சுக் கொடுத்தாள். அதற்கு அறவணன், ஆமாம் என்று தலையை அசைத்து விட்டு ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு போயே போய் விட்டார். அன்றில் உள்ளம் கன்றிவிட்டது. ஆனால் அவள் ஒரு வகையில் தனக்குத்தானே திருப்தி பட்டுக் கொண்டாள். நேற்று நாம் புகைவண்டியில் நடந்து