பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 35 வண்டி ஒடிக் கொண்டிருந்தது. அங்கேயிருந்த கொடுவாள் மீசைக்காரர் ஒருவர் அறவணனை நோக்கி, ஏன் தம்பி! நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்?" என்று கேட்டார். 'திருச்சிக்கு' என்று அறவணன் சொன்னார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு பெரியம்மா அன்றிலை நோக்கி, ஏம்மா! நீ எந்த ஊருக்குப் போகிறாய்?' என்று கேட்டார்கள். 'நானும் திருச்சிக்குத்தான்' என்று அன்றில் பதில் சொன்னாள். கொடுவாள் மீசைக்குச் சினம் வந்து வி ட் டது. பெரியம்மாவை நோக்கி, கணவனும் மனைவியும் ஒர் ஊருக்குப் போகாமல் வெவ்வேறு ஊருக்கா போவார்கள்? இது என்ன கேள்வி: திருச்சிக்குப் போவதாகக் கணவன் முதலில் சொன்னபிறகு மனைவியை வேறு கேட்க வேண்டுமா?' என்று கொடுவாள் மீசைக்காரர் கடிந்து கொண்டார். ஒ, அவர்கள் புருழ்சனும் பெண்சாதியுமா! நான் தனித்தனி என்று தவறாக நினைத்துவிட்டேன்’ என்று பெரியம்மா கொடுவாள் மீசையின் கூற்றுக்கு முத்திரை யிட்டார்கள். அங்கிருந்த அனைவரும் அன்றிலையும் அறவணனையும் கணவன்-மனைவி என முழுக்கமுழுக்க நம்பிவிட்டார்கள். - அங்கிருந்தவர்களின் தவறான முடிவுக்கு அன்றிலும் அறவணனும் மறுப்பு ஒன்றும் சொல்லவில்லை. என்ன வென்று சொல்வது? இருவருமே வெட்கப்பட்டனரென் றாலும், அன்றிலின் முகம் அளவு மீறிச் சிவந்துவிட்டது. அந்த நேரத்தில் அவளைப் பார்க்க அறவணனுக்கு அச்சமா யிருந்தது. அவள் ஏதாவது எண்ணிக்கொண்டால் என்ன செய்வது? இருப்பினும், சிறிது நேரம் கழித்து அவர் அன்றிலைப் பார்த்தபோது, அவளும் தன்னைப் பார்ப்பது தெரிந்தது. அப்போது இருவருமே, அங்கிருந்த மக்களின்