பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சுந்தர சண்முகனார் அறியாமையைப் புலப்படுத்தும் அசட்டுச் சிரிப்புடன் கண்களை மெதுமெதுவாக மூட முயன்றனர். சிறிது நேரம் கழித்து ஒருவர் அறவணனை நோக்கி 'மணி என்ன?’ என்று கேட்டார். அறவணன் கைக் கடிகையாரத்தைப் பார்த்தபோது மணி நின்றுவிட்டிருந்தது. இப்போது அவர், கேட்டவர்க்கு மணி சொல்லியாக வேண்டும் - தானும் சாவி கொடுத்து மணியைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதற்காக, கையில் கடிகையாரம் கட்டியிருக்கிற இன்னொருவருடைய துணையை நாட வேண்டும். அங்கே அண்மையில் அன்றில் கையில்தான் கடிகையாரம் இருந்தது. அவளை மணி கேட்கலாமா - கூடாதா என்று அறவணன் தயங்கினார். ஏன், கேட்டா லென்ன? நேற்றுக் கல்லூரி வெளி வாயிலில் அவளாகவே வலிய வந்து நம்மிடம் பேசினாளே. நாம்தானே சரியாகப் பேசவில்லை? அதுகுறித்து அவள் மனம் புண்பட்டிருக்குமோ? முந்தாநாள் புகைவண்டியில் அவள் நம்மிடம் சரியான முறையில் பேசாததனால் நம் மனம் புண்பட்டது போலத் தானே, நேற்று நாம் பேசாததனால் அவள் மனம் புண்பட் டிருக்கும்? அதனை ஈடுகட்ட இப்பொழுது நாம் பேசினால் என்ன? மேலும் மணி கேட்பதில் தவறு ஒன்றும் இல்ல்ையேஎன்ற முடிவுக்கு வந்தவராய், அன்றிலை, நோக்கி மணி என்ன ஆகிறது?’ என்று கேட்டார். மணி பதினொன்றே முக்கால்' என்றாள் அவள். மணி கேட்டவருக்கும் திருப்தி யாயிற்று - அறவணனும் தன் கைக் கடிகையாரத்தைத் திருத்திக்கொண்டார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்தாற்போல் மற்றொன்று நிகழ்ந்தது; வண்டியில் ஒருவன் சோடா கிரழ்சு கொண்டு வந்து விற்றான். அறவணன் ஒரு சோடா கேட்டார். பத்துக்காசு சில்லறையாக இருக்கிறதா?’ என்று சோடாக்