பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சுந்தர சண்முகனார் கொள்வேன். நீங்கள் எனக்கு மூன்று வேளை உணவு கொடுத்ததே போதும் அந்த உதவியை என்றும் மறவேன். அதற்கு எவ்வாறு கைம்மாறு புரிவதென்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தயைசெய்து என் வேண்டுகோள் ஒன்றை நீங்கள் மறுக்கக்கூடாது.' 'என்ன அது?' 'நான் சென்னையில் பிரெஞ்சு ஆசான்' என்னும் புத்தகம் இரண்டு படிகள் வாங்கினேன்; எனக்கு ஒன்று-என் நண்பர் ஒருவருக்கு ஒன்று. எனவே, அவற்றுள் ஒன்றைத் தங்களுக்கு என் அன்பளிப்பாக வழங்க விரும்புகின்றேன். அந்தப் புத்தகத்தின் துணை கொண்டு நாம் பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளலாம். பிரெஞ்சு, ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக ஒர் உயர்ந்த உலகமொழி யல்லவா? எனவே, தயைசெய்து தாங்கள் தட்டாது பெற்றுக் கொள்ள வேண்டும்.' 'உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி! நான் எவரிடத்தும் எப்போதும் எதுவும் பெற்றுக்கொண்டதில்லை. ஆயினும் உங்களிடத்தில் அதனைப் பெற்றுக்கொள்ளத் தடையில்லை. ஆனால் நானும் அந்தப் புத்தகத்தை நேற்றுச்சென்னையில் வாங்கிவிட்டேனே. அதனால். உங்கள் நண்பருக்கே நீங்கள் அந்தப் புத்தகத்தை அன்பளிப்பு செய்யலாம். தயைசெய்து என்னை மன்னிக்கவேண்டும். சரி நல்லது, அப்படியே செய்கிறேன். இரவு எங்கே தங்குவேன்-பணத்துக்கு என்ன செய்வேன் என்று என்னைப் பற்றி நீங்கள் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டீர் களே! ஆனால் நான் உங்களைப் பற்றி ஒன்றும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையே.' இரவு பதினொரு மணிக்கு நீங்கள் புகைவண்டி நிலையத்திலிருந்து தனியாக எப்படி வீட்டிற்குப்போவீர்கள்?