பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வீகத் திருமணம் 59 களாம்? அந்தப் பெண் இவ்வளவு கொடுத்து இந்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தில்லையே. அந்த உடைமைகளையெல்லாம் வைத்துக் கொண்டு, தானே வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாமே? அவளு க் கு ப் பிள்ளைப்பேறு அளிப்பதைவிட இந்த மாப்பிள்ளையால் வேறு எதுவும் செய்ய முடியாது போலும்! அவளிடமிருந்து வீடு நிலம் காசு பணம் பெற்று நடத்தும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? நீ ஓர் ஆண்பிள்ளை . இவ்வளவு நாள் பிறந்து வளர்ந்து படித்து ஆள் ஆனதற்கு என்ன பொருள்? வாழ்க்கை நடத்த ஓர் ஆணுக்கு ஒரு பெண் தேவை . ஒரு பெண்ணுக்கு ஒர் ஆண் தேவை. இருவரும் ஈடு தாழ்த்தி யில்லாத இணையாக - மாற்றுக் குறையாத மாணிக்கங் களாகத் திகழ வேண்டும். ஒருவரை யொருவர் விலை கொடுத்து வாங்குவதா தி ரு ம ண ம்? இல்லையே! மாப்பிள்ளைக்குச் சரியான விலை பெண் மட்டுந்தானே! பெண்ணுக்குச் சரியான விலை மாப்பிள்ளை மட்டுந்தானே! இதை விடுத்து, மேலும் எதிர்பார்ப்பது எப்படி முறை யாகும்? அருள் கூர்ந்து அன்பர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சட்டத்தினால் மக்களைத் திருத்துவது ஒருபுறம் இருக்க, உண்மையாகவே மக்களின் மனத்திலும் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். இல்லையேல், ஒருசிலர், சட்டத்தின் கண்களில் மிளகாய்ப்பொடியைத் தூவிவிடவுங் கூடும். ஒரு வே ைள, திருமணச் செலவிற்குக்கூட மாப்பிள்ளைக்கு வசதி இல்லையென்றால், பெண்வீட்டார் திருமணம் செய்து வைக்கலாம். அதற்குமேல் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது. இதில் பெண் வீட்டாரும் விழிப்பாய் இருக்க வேண்டும்; மேல் விழுந்துகொண்டு போய்த் தங்களை மாப்பிள்ளை வீட்டாரின் 'பூகம்ப" வாய்க்கு இரையாக்கிக் கொள்ளக்கூடாது - என்று