பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 63 மொழிப்படி, இந்தக் கொடுஞ்செயல் நண்பன் ஒருவனிட மிருந்து இளந்திரையனுக்குத் தொற்றிக் கொண்டது. அவனுடைய நண்பன் நக்கீரன் என்பவனுக்கு ஒரு தங்கை உண்டு. அவளுக்குத் திருமணமான ஆண்டில் மாப்பிள்ளை தீபாவளி மருவுக்காக வந்திருந்தார். தனக்கு வைர மோதிரம் வாங்கிப் போடவேண்டும் என்று வற்புறுத்தினார். 'இப்போது வசதியில்லை; பிறகு ஆகட்டும் என்று மாமனார் சொல்லிப் பார்த்தார். கேட்டால்தானே. வைர மோதிரத்தை வைத்தால்தான் காஃபியைக் கையால் தொடுவேன்' என்று மருமகப்பிள்ளை அடம் பிடித்தார். அது பொறாத நக்கீரன், "உனக்குக் காஃபியும் கிடையாதுகல்லிழைத்த மோதிரமும் கிடையாது . கன்னத்தில் அறைதான் கிடைக்கும்’ என்று சொல்லிக்கொண்டே மாப்பிள்ளையின் கன்னத்தில் ஓர் அறைவிட்டான்; இன்னது கொடுத்தால்தான் கை நனைப்பேன்’ என்று முரட்டுத்தனம் செய்கின்ற மாப்பிள்ளைகள் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று ஆர்ப்பரித்தான். இது முறையா? இந்த நிகழ்ச்சியை நக்கீரன் வாயிலாக அறிந்து வைத்திருந்த இளந்திரையன், இப்போது தங்கள் வீட்டுக்கு வந்திருந்த தாண்டவராயனது முதுகைக் கவனித்து அனுப்பி விட்டான். அதன் விளைவை அவன் அறிவானா? அந்த ஆண்டு அன்றிலுக்குத் திருமணம் கூடிவரவில்லை. வேறு ஊர்களிலிருந்து பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார்களை யெல்லாம், தாக்குண்ட தாண்டவராயன் கலைத்துக் கொண்டேயிருந்தார். என் உயிர் இருக்கும் வரைக்கும் மாசிலாமணியின் மகளுக்குத் திருமணம் ஆகி விடாமல் கலைத்துக் கொண்டேயிருப்பேன்’ என்று தாண்டவராயன் குள் (சபதம்) எடுத்துக் கொண்டார். அவ்வாறே அந்த ஆண்டு அவர் வெற்றி பெற்று விட்டார்.