பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சுந்தர சண்முகனார் காட்ட முடியும். யாரோ இரண்டொருவர் தவறுவதைப் பற்றிப்பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது-என்றெல்லாம் அன்றில் பலப்பல எண்ணியிருக்கக் கூடுமல்லவா? படித்தவ ளாயிற்றே - பட்டணத்தில் பழகியவளாயிற்றே. என்னவோ ஏதோ! தனக்குத் திருமணமே வேண்டாம்; காலமெல்லாம் கன்னியாகவே இருந்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு எப்படியோ வந்துவிட்டாள்; தன் முடிவைப் பெற்றோர்க்கும் தெரிவித்தாள். அன்றில் தானாக இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை. அப்படியென்றால், அவளது படிப்பும் பட்டண வாழ்க்கையும் அதற்குக் காரணமா? இல்லை - அவை இல்லை. படித்த பெண்கள் அனைவருமா - பட்டணங்களில் வாழும் பாவையர் எல்லோருமா திருமணமின்றி வாழ்கின்றனர்? இல்லையே. படித்த - பட்டணங்களில் வதிகின்ற நங்கையர் ஒருசிலர் மணமின்றியிருப்பதைப் பார்த்தமையால்தான் அன்றிலுக்கும் அத்தகு உணர்வு தொற்றிக்கொண்டது என்று எவரும் சொல்ல முடியாது. அவளது முழுமாற்றத்திற்கும் முக்கியக் காரணம் பெண்கேட்க வருபவரின் இமாலயப் பேராசையும் அதைத் தாங்கமுடியாத அவளது குடும்பச் சூழ்நிலையுமே. அவளது திருமண முயற்சியின் காரணமாக நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகள் அவள் மனத்தில் வெகுவேலை செய்திருந்தன. இதுவே அவளது முடிவுக்கு முதற் காரணம். கூட, படிப்பும் பட்டண வாழ்க்கையும் துணைக் காரணமாகச் சேர்ந்துகொண்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். இவ்வாறு திருமணமே வேண்டாம் என்றிருந்த அன்றிலின் வாழ்க்கையில் அறவணனது தொடர்பு ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கியிருப்பதாக அவள் உள் மனம் உணர்ந்தது. அவ்வுணர்வு பெருகி, திருமண வேட்கை யாகவும் தலையெடுக்கத் தொடங்கியது. அன்றில் தன் நிலையை எண்ணித் தானே நாணினாள். இதுதான்