பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் η 1 காமத்தியற்கை போலும் என்று தனக்குத்தானே இரங்கினாள். தமிழ் கற்ற அவளுக்கு அப்போது மணிமேகலையின் வரலாறு நினைவுக்கு வந்தது! பூம்புகாரில் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. கோவலன் கொலையுண்டதைப் பொறாத மாதவி புத்தத் துறவி (பிக்குணி) யானாள். பச்சிளங் குருத்தாகிய மகள் மணிமேகலையையும் துறவு பூணச் செய்தாள். ஒரு நாள் இறைவழிபாட்டிற்கு மலர் கொய்வதற்காகத் தோழி சுதமதியுடன் மணிமேகலை மலர்வனம் புக்காள். அவளை அடைய வேண்டும் என்று அவாக் கொண்டிருந்த அவ்வூர் அரசிளங்குமரனாகிய உதயகுமரன் என்பான் அவளைப் பின் தொடர்ந்தான். அவனது வருகையை அறிந்த மணிமேகலை அச்சங் கொண்டு ஆங்கிருந்த ஒரு பளிங்கு அறையினுள் புகுந்து தாளிட்டுக் கொண்டாள். அரசகுமரன் சுதமதியிடம் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான் - பயனில்லை. பின்னர், சீ, இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாய், மணிமேகலையைக் கடிந்து இழித்துப் பேசி விட்டு அவ்விடம் விட்டகன்றான். அதன் பின் பளிங்கு அறையிலிருந்து வெளி வந்த பாவை மணிமேகலை சுதமதியை நோக்கி இளவரசு என்னை இழித்துப் பேசியும், அவர் பின்னேயே என்மனம் செல்லுகிறதே! இதுவோ அன்னாய் காமத்து இயற்கை!" என்று தன் மனத்தின் அவல நிலையை வெட்ட வெளிச்ச மாக எடுத்துச் சொன்னாள். அன்று மணிமேகலைக்கு ஏற்பட்ட அனுபவம் - அவளது மனத்திற்கு நேர்ந்த சோதனை, இன்று த்னக்கு நேர்ந் திருப்பதை அன்றில் ஆழ உணர்ந்தாள். துறவறத்தில் ஈடு பட்டிருந்த மணிமேகலையின் மனமே உதயகுமரன் பின்னே சென்றபோது, அன்றிலின் மனம் அறவணன்மேல் சென்றதில் வியப்பில்லையே. தன்னை இழித்துப் பேசிய உதயகுமரன் பின்னே மணிமேகலையின் மனம் சென்றபோது, தன்னோடு