பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்விகத் திருமணம் 7 என்று எழுந்தார். அது கண்ட அவள், வேண்டாம் என்று வாயால் சொல்லாமல் கையமர்த்திக் காட்டி அவரை உட்காரச் செய்து, தானும் அவர் பக்கத்தில் சிறிது இடை வெளி விட்டு ஒண்டி ஒடுங்கி யமர்ந்தாள். தனக்கும் அவருக்கும் நடுவிலே தானாக வலிந்து உண்டாக்கி வைத்துள்ள சிறு இடைவெளியிலே தன் கைப்பெட்டியை வைத்துச் சுவர் எழுப்பிக் கொண்டாள். பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இருவரிடமும் அமைதி நிலவியது. மேலும் கீழும் தூங்கிக் கொண் டிருப்பவரின் எரிமலைக் குமுறல் போன்ற குறட்டை ஒலிகள் அவர்தம் அமைதிக்கு மேலும் மெருகு கொடுத்தன. இப்படியே சிறிது நேரம் ஒடிக்கொண்டிருந்தது. ஒருவரையொருவர் ஏறிட்டுப் பார்த்துக் கொள்ளவே கூசுபவர்கள் பேசுவது எங்கே? ஒருவர்க்கொருவர் எதிர்ப் புறத்தில் அமர்ந்திருந்தாலாவது, எதிரும் விழியும் என்று சொல்வதற்கேற்பப் பார்த்துக் கொள்ளவாவது வாய்ப்பிருக்கும்! அவர்கள்தான் பக்கலில் அமர்ந்திருக் கிறார்களே! ஏன் - பக்கவாட்டத்தில் அமர்ந்திருந்தால்தான் என்ன? பார்ப்பதால் பழுது நேர்ந்துவிடுமா? பேசுவதால் மாசு வந்து விடுமா? நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்? . நான் இந்த ஊருக்குப் போகிறேன் - நீங்கள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்? - நான் அந்த ஊருக்குப் போகிறேன் - என்று பேசிக்கொண்டால் என்ன? எத்தனையோ துணை களுள் பேச்சுத்துணை என ஒன்று சொல்லுவார்களே! வாய் உள்ள இவர்கள் பணச் செலவு இல்லாத இந்தப் பேச்சுத் துணையை ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது? முடியாதுதான்! இவர்கள் இருவரும் இருவேறு சாதி யினர். ஒருவர் ஆண்சாதி; மற்றொருவர் பெண்சாதி.