பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சுந்தர சண்முகனார் ஒருவர்க் கொருவர் உரையாடாமல் சென்றுகொண் டிருந்தனர். அன்றிலின் முகம் நாணத்தால் சிவந்து காணப் பட்டது. அறவணன் முகம் ஒருவகைத் திகிலால் வெளுத் திருந்தது. போகப் போக, எட்டி நடந்தவர் சிறிது இணைந்து நடக்கத் தொடங்கினர். பார்த்துக் கொள்ளாது நடந்தவர் ஏறிட்டுப் பார்க்கத் தொடங்கினர். முதல் பார்வை வெற்றென இருந்தது. அடுத்த பார்வையில், முகங்களில் இருந்த சிவப்பும் வெளுப்பும் மறைந்துபோயின. மூன்றாவது பார்வையில் புன்னகையும் சேர்ந்துகொண்டது. இப்போது எல்லாம் சரியாய்ப் போக, பழைய நிலைக்குத் திரும்பி விட்டனர். அமைதியான குளத்து நீரில் கல்லெறிந்தால் நீர்ப்பரப்பின் நிலைமையில் மாறுதல் ஏற்படுகிறது; நீர்ப் பரப்பு பழைய அமைதி நிலையை அடையச் சிறிது நேரம் ஆகத்தானே செய்கிறது! அன்றிலுக்கும் அறவணனுக்கும் ஏற்பட்ட அனுபவம், திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் இணைந்து சென்றால் எந்தப் பெயருக்கும் தயாராயிருக்க வேண்டும் என அவர் களை எச்சரித்ததல்லாமல், நம் நாட்டின் தூய்மையான ஆண்-பெண் உறவு சார்பான நாகரிகத்திற்கு ஒர் அறை கூவலாகவும் இருந்தது. தங்களைக் கணவனும் மனைவியுமாகப் பிறர் எண்ணினாலும் தவறில்லை; ஆனால் கள்ளக் காதலர்களாக எவரேனும் எண்ணி விட்டால் என்ன ஆவது? முன்பின் அறியாதவர் அவ்வாறு எண்ணினாலும் தொலைந்து போகிறது! ஆனால், தன்னைப் பற்றித் தெரிந்தவர் எவரேனும், தவறாகக் கயிறு திரித்துத் தன் தந்தைக்கும் தமையனுக்கும் தெரிவித்து விட்டால் என்ன செய்வது?" என்பதாக அன்றில் அடைந்திருக்கும் கலக்கத்தைப் புரிந்து கொண்ட அறவணன், அன்றிலை நோக்கி, 'உங்களுக்கு மனம் சரியில்லை யென்றால், நீங்கள் தனியாகவே