பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தய்விகத் திருமணம் 89 மகாபலிபுரத்தைச் சுற்றிப் பார்க்கலாம்' எனக்கூறி வழி வகுத்துத் தந்தார். இந்தப் பொல்லாத சமுதாயத்தில் ஒரு பெண் தனியாக அலைவதைக் காட்டிலும், எந்தப் பெயர் வருவதானாலும் ஒரு துணையோடு பயணம் செய்வதே மேல்.’’ என்ற உறுதியான முடிவுக்கு இப்போது தான் வந்துவிட்டதாக அன்றில் கூறினாள். அதன் பிறகே அறவணனது உள்ளம் அமைதி பெற்றது. இவ்வாறு அறவணனைப் போலத் தூய உள்ளம் உடையவராக எத்தனை இளைஞர்களை இவ்வுலகில் காண வியலும்? இந்த நேரத்தில் இருவரையும் வழிகாட்டிகள் சிலர் வளைத்துக் கொண்டனர். மகாபலிபுரத்தைப் பற்றிய விவரங்களைத் தாம் தாம் விளக்குவதாக ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு முந்தினர். அவர்களுள் தக்க ஒருவரை இருவரும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அந்த வழிகாட்டி, மகாபலிபுரத்துச் சிற்பங்களைப் பற்றித் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டு வந்தார். மலைப்பாறைச் சிற்பங்கள், பஞ்சபாண்டவர் தேர்கள், கல்யானை, வெண்ணெய்க் கல், கலங்கரை விளக்கு, சிற்பக் கல்லூரி, கோயில்கள் முதலியவற்றைப் பற்றியெல்லாம் வழிகாட்டி சக்கைப்போடு போட்டார். அளவு மீறிய அவருடைய விளக்கங்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன அறவணனும் அன்றிலும் ஒரு தொகையைப் பரிசாக அளித்து நன்றியும் செலுத்தி அவரை அனுப்பிவிட்டனர். சுற்றிய களைப்பு தீரச் சுவை நீர் பருகிவிட்டு, ஒரு தோப்பின் நடுவில் கண்ட ஒரு பொய்கைக் கரையில் இருவரும் அமர்ந்து இளைப்பாறினர். அங்கே தாம் விலைக்கு வாங்கிய பொருள் களின் அழகில் சிறிது நேரம் ஈடுபடலாயினர். மற்ற மற்ற மக்கள் சிலர் மகாபலிபுரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கும், எம்.ஏ. படித்த தமிழ்ப் பேராசிரியர்களாகிய அறவணனும் அன்றிலும் மகாபலிபுரத்தைச் சுற்றிப்