பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சுந்தர் சண்முகனார் பார்ப்பதற்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடு இருக்கத் தான் செய்யும். இங்கே என்ன இருக்கிறது? வெறுங் கல்லும் பொம்மையுந்தானே' - என்று சொல்லிப் போகிறவர்கள் ஒருசிலர். இந்த மலைப் பாறைகளிலே இந்தச் சிற்பங்களையெல்லாம் எப்படித்தான் செதுக்கினார் களோ' - என்று வியந்து செல்பவர் ஒருசிலர். திருக்கோயில் வழிபாட்டிற்கு முதலிடம் தந்து உள்ளங்கசிந்து செல்பவர் ஒருசிலர். ஒற்றைக் கல்லில் குடைந்த பஞ்ச பாண்டவர் தேர்களையும், யானையையும் வாய்பிளக்கப் பார்த்துப் பாராட்டி மகிழ்பவர் ஒருசாரார். கடற்கரைக் கோயில் மதிலில் கடல் அலைகள் வந்து மோதி மோதிப் பார்த்துத் திரும்பி ஓடுவதைப் பெரிதுபடுத்திப் பேசிச் செல்பவர் ஒரு சாரார். வெண்ணெய்க்கல் உருளாது அப்படியே நிற்பதில் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் மற்றும் சிலர், அங்கே விற்கும் பொருள்களை வாங்கி அழகு பார்த்தும், வீட்டிற்குச் சென்று குழந்தைகட்குத் தந்து அவர்களை மகிழ்விக்கலாம் என்று எண்ணியும் பூரித்துப் போகின்றவர்கள் மற்றும் பலர். சிற்பக் கல்லூரியைச் சென்று பார்த்து, சிற்பக் கலை நுணுக்கங்களைத் தெரிந்தவர்போல் நடித்துச் செல்பவர் சிலர். கல்வெட்டுகள், கலங்கரை விளக்கம், துறைமுகக் கால்வாய் முதலியவற்றை வரலாற்றுக் கண்கொண்டு நோக்கி வரலாறு பேசிச் செல்வோர் சிலர். மகாபலிபுரத்தை முன்னரே பலமுறை கண்டிருந்தும், இன்பப் பொழுதுபோக்கிற்காக இன்னொரு முறையும் வந்து அரட்டையடித்துவிட்டுச் செல்லும் இளைஞர் பலர் - பெரியவர் சிலர். தேன் நிலவுக்காக வந்து இன்பத்தில் திளைத்துத் தேக்கெறிவு கொண்டு திரும்பும் புத்தம் புதிய திருமண மக்கள் பற்பலர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்தும், கல்வியுலா அல்லது மகிழ்வுச் செலவு என்னும் பெயரில் பேருந்து வண்டிகளில் ஆசிரியர்களுடன் திரள்