பக்கம்:தெய்விகத் திருமணம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சுந்தர சண்முகனார் உயர்ந்த ஒரு பெரிய துறைமுகப்:பூட்டணத்தைத் தமிழகம் இழந்து போயிற்றே மா பெருநகரம் மண்மேடிட்ட சிற்றுாராக மாறிவிட்டதே! என்னே போரின் கொடுமை! மக்களின் நிலையாமையைப் போல, மன்னர்களின் ஆட்சியின் நிலையாமையைப் போல, . மாநகரங்களும் நிலைக்கா மற்போய் விடுகின்றனவே என்றெல்லாம் அறவணனும் அன்றிலும் நிலையாமையைப் பற்றிப் பிதற்றும் வேதாந்திகளாக மாறிவிட்டனர். ஆனால் அந்த நேரத்தில் இவர்களைக் காணும் பிறர், காதலர் இருவர் காதல் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றே கருதக்கூடும். ஆனால் இவர்தம் எண்ணங்களோ, இமயத்தின் எவரெஸ்ட் உச்சிக்கு மேலே சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கின்றன என்பதை யார் அறிவர்? போரின் கொடுமையையும் உலக நிலையாமையையும் பற்றிப் பேசிய இருவரும் பெருமூச் செறிந்து, சிறிது நேரம் வாய்பேசாது அமைதியாக அமர்ந் திருந்தனர். - புல் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சுற்றித் திரிந்து போதிய அளவு மேய்ந்த பின்னர் ஆவினம் ஒரிடமாகத் தங்கிப் படுத்துக்கொண்டு. மேய்ந்தவற்றையெல்லாம் மீண்டும் வாய்க்குள் கொண்டுவ்ந்து நன்கு மென்று அரைத்து அசைபோட்டு உள்ளே விழுங்குமாறு போல, அன்றிலும் அறவணனும் மாமல்லபுரம் முற்றும் போதிய அளவு சுற்றிப் பார்த்துப் பல்வேறு காட்சிகளைக் கண்ட றிந்து, அவற்றைத் தாம் முன்பு படித்து அறிந்தவற்றோடும் கேட்டு அறிந்தவற்றோடும் இணைத்துப் பார்த்துக்கொண்டு, ஓரிடமாக அமர்ந்து அவற்றையெல்லாம் அசைபோட்டுத் தம் எண்ணத் திரையில் ஒருமுறை ஓடவிட்டுப் பார்த்து இறுதியாக அமைதியில் ஆழ்ந்து விட்டனர்.