பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

அழகான தோற்றமுடைய செவிலிகள் தான் அரண்மனையில் வேலைக்கு வைத்துக் கொள்ளப்பட்டார்கள். சிரித்த முகத்தோடு உள்ளவர்கள் தாம் அந்தப்புரத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். முகத்தைச் சிணுங்குபவர்களும், கவலைப்பட்டவர்களும், திருப்தியில்லாதவர்களும் அழகற்றவர்களும் அரண்மனை வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இப்படிச் சித்தார்த்தனுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவனறியாமலே சுத்தோனரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அவன் வளர்ந்து வந்தான். உரிய காலத்தில் ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டான். ஆசிரியர் எவ்வளவு கற்றிருந்தாரோ அவ்வளவும் சித்தார்த்தன் கற்றுக் கொண்டுவிட்டான். ஆசிரியர் எத்தனை கலைகள் கற்றிருந்தாரோ அத்தனை துறைகளும் சித்தார்த்தனுக்குப் பாடமாகிவிட்டன.

“மன்னர் பிரானே, தங்கள் பிள்ளைக்கு எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டேன். இனியும் அவன் படிக்க வேண்டும் என்றால், என்னைக் காட்டிலும்