பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

18

மேதைகள் யாராவது இருந்தால் அவரிடம் அனுப்ப வேண்டியதுதான்" என்று ஆசிரியர் வந்து கூறியபோது, தன் மகனின் திறமையை அறிந்து சுத்தோதனர் உள்ளத்தில் களிப்பு மிகுந்தது. மிகுந்த உவகையோடு ஆசிரியருக்குரிய சீர் வரிசைகளைச் செய்து அனுப்பி வைத்தார். கணித அறிவும் நூலறிவும் மட்டும் ஓர் அரசிளங்குமரனுக்குப் போதுமா? வீர விளையாட்டுகள் முற்றிலும் அவன் அறிந்து கொள்ள வேண்டாமா? சுத்தோதனர் தன் நாட்டில் இருந்த மிகப் பெரிய வீரர்களை அழைத்தார். சித்தார்த்தனுக்குப் போர்க்கலை பயிற்றும்படி ஆணையிட்டார்.

பயிற்சி கொடுப்பவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இளவரசன் மனம் நோக யாரும் நடந்து கொள்ளக்கூடாது. பயிற்சியில் இளவரசனுக்கு நாட்டம் இல்லை யென்றால், அத்தோடு நிறுத்திவிட்டு அரசருக்குத் தெரிவிக்க வேண்டும்.

சித்தார்த்தன் எந்தக் கலையிலும் சலிப்புக் கொண்டவனாகத் தெரியவில்லை. வாள் வீச்சில்