பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

கைதேர்ந்தவனானான். அதுபோலவே வேல் பாய்ச்சுவதிலும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான், யானைகளைப் பழக்கி அடக்கி நடத்தும் கலையையும் கற்றுக் கொண்டான். அவன் மாமன் ஒருவன் அம்பு எய்யும் முறையைப் பயிற்று வித்தான்.

பயிற்சியாளர் ஒவ்வொருவரும் வந்து சித்தார்த்தன் எதையும் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளும் பாங்கையும், இலாவகமாக ஆயுதங்களைக் கையாளும் திறமையையும் பற்றிக் கூறும் பொதெல்லாம் சுத்தோதனர் உள்ளம் குளிர்ந்துவிடும். “என் மகன் நாடாளப் பிறந்தவன்தான். இதில் ஐயத்திற்கிடமே இல்லை" என்று தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்வார்.

ஒருநாள் ரோகிணி ஆற்றின் கரையிலே இருந்த ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விட்டது. அந்த மரம் ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டது. தடைப்பட்ட தண்ணீர் கரைப் பக்கமாக உடைத்துக் கொண்டு வயற்புறங்களிலே வெள்ளமாகப் பாய்ந்து ஓடியது. இதனால் விளைந்திருந்த வயல்கள் நாசமாயின. ஆற்றின் கீழ்ப் பகுதி-