பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

அரண்மனையிலிருந்து சிறுவர் கூட்டம் ஒன்று ரோகிணியாற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அரண்மனைப் பூங்காவை யொட்டி யிருந்த ஆற்றங்கரையில் ஒன்று கூடி விளையாடுவதற்காகத்தான் அச்சிறுவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பூங்காவின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது தலைக்கு மேலே ஒரு தாராக் கூட்டம் பறந்து சென்றது. சித்தார்த்தனும் மற்ற சிறுவர்களும் பட படக்கும் பறவைகளின் இறக்கை ஒலி கேட்டு மேல் நிமிர்ந்து பார்த்தார்கள். அப்போது சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தேவதத்தன் எனும் சிறுவன், தன் வில்லை வளைத்து தாராக் கூட்டத்தை நோக்கி ஓர் அம்பை எய்தான்.

பாவம்! ஒரு தாராப் பறவை அம்பு பட்டுச் சாய்ந்து கீழே விழுந்தது. அது நடந்து சென்று கொண்டிருந்த சித்தார்த்தனின் எதிரில் அவன் காலடியில் வந்து வீழ்ந்தது.

சித்தார்த்தன் குனிந்து அந்தப் பறவையை எடுத்தான். குருதி வழியும் அதன் உடலைக் கண்டு உருகி மனங் கசிந்தான். எவ்வளவு மெதுவாக எடுத்தால் பறவைக்கு வேதனை குறைவாக இருக்குமோ, அவ்வளவு மெது-

2