பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

26

ஒரு மாளிகை கார் காலத்தில் வசிப்பதற்கு ஏற்றதாயிருந்தது. மழைக் காற்றின் ஊதலோசையும். இடியின் உறுமலோசையும், மின்னல் வீச்சின் ஒளியும் உள் நுழையாதபடியான அமைப்புடன் கைதேர்ந்த கட்டிடக் கலைஞர்களைக்கொண்டு அந்த மாளிகையைக் கட்டி முடித்தார் சுத்தோதனர்.

இரண்டாவது மாளிகை கோடை காலத்தில் இருப்பதற்குப் பொருத்தமாயிருந்தது. வெப்பம் உள் நுழையாதவாறு மாளிகையைச் சுற்றிலும் அசோக மரங்கள் வளர்க்கப் பெற்றிருந்தன. இடைவிடாது பீச்சிப் பாய்ந்து, கொண்டிருக்கும் நீரூற்றுக்கள் மாளிகையின் உள்ளும் புறமும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. நல்ல காற்றோட்டமுள்ளதாகவும் கோடையின் வெப்பம் சிறிதும் தாக்காதவாறும் அமைக்கப் பெற்றிருந்தது அம்மாளிகை.

மூன்றாவது மாளிகை பனிக் காலத்தில் வாசம் செய்வதற்குத் தக்கதாயிருந்தது. வாட்டும் குளிர்காற்று உள் நுழையாதபடி செய்யப் பெற்றிருந்ததுடன், ஆங்காங்கே கணப்புக்களும் அமைக்கப் பெற்று வாடைக்