பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

28

ஏராளமான பொருட் செலவில் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. சித்தார்த்தனும் அழகி யசோதரையுடன் இன்பமாக இல்லறம் நடத்தினான். சித்தார்த்தனும் யசோதரையும் அன்புடன் இன்பமாக வாழ்வதைக் கண்ட பிறகுதான், சுத்தோதனர் மனக்கவலையில் பெரும்பகுதி தீர்ந்தது. இனிமேல் தன் மகன் துறவியாக மாட்டான் என்ற ஓர் உறுதி அவர் உள்ளத்திலே வளரத் தலைப்பட்டது. இருந்தாலும் அவர் தம் மகன் உலக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாதபடியே பார்த்துக்கொண்டு வந்தார். ஏனெனில், திடீரென்று அவன் மனம் மாறிவிட்டால் என்ன செய்வதென்ற ஓர் அச்சம் சிறிதளவு அவர் மனத்தில் இருக்கத்தான் செய்தது.

இப்படி சுத்தோதனர் ஓரளவு கவலை நீங்கி இருந்தபோதுதான் அவருடன் பிறந்த தம்பி, அந்தப்புரமே கதியென்று சித்தார்த்தன் கிடப்பது அரசகுலத்து மாவீரர்களுக்கு ஏற்றதல்ல என்ற உண்மையை நினைவு படுத்தினான்.

யார் என்ன சொன்ன போதிலும் சித்தார்த் தன் அசாதாரண ஆற்றல் படைத்த மாவீரன் என்பதிலே சுத்தோதனருக்குச் சிறிது கூட