பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

மானின் குடலைக் கிழித்திருக்கும். ஆனால், இழுத்த நாணை அவன் விடுவிக்காது இழுத்தது இழுத்தபடியே அந்த மானையே பார்த்துக் கொண்டு நின்றான். காட்டுவழியே அது துள்ளித் துள்ளிப் பாய்ந்து ஓடிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டது.

பின்னும் பின்னும் பல மான்கள் அவன் எதிரே அருகிலும் தூரத்திலுமாகத் தோன்றித் துள்ளிப் பாய்ந்து ஓடிச்சென்று மறைந்தன. சித்தார்த்தன் வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு அவை ஓடி மறைவதைப் பார்த்துக்கொண்டு அசைவற்று நின்றான்.

மான் கூட்டத்தைக் கலைத்து விட்டுத் திரும்பி வந்த நந்தன், சித்தார்த்தன் ஐந்தாறு மான்களையாவது வீழ்த்தியிருப்பான் என்று எதிா பார்த்தான். ஆனால், வீழ்ந்து கிடந்த வில்லையும் அம்பையும் தான் அவன் பார்த்தானே தவிர ஒரு மானைக் கூடக் காணவில்லை.

"சித்தார்த்தா, நீ வேட்டையாடவில்லையா?” என்று கேட்டான் நந்தன்.

"நந்தா, அந்த மான்களைக்கொல்ல எனக்கு மனம் வரவில்லை. அவை நமக்கு என்ன தீங்கு