பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

வரும் என்றோ ஒரு நாள் இப்படி இறந்து பிணமாகி மண்ணுலகைவிட்டுப் போக வேண்டியது தான்!" என்று விரிவாகவும் விளக்கமாகவும் சாக்காட்டைப் பற்றிக் கூறினான் தேர்ப்பாகன்.

சிந்தனைவயப்பட்டவனாகச் சித்தார்த்தன் தன் மாளிகைக்குத் திரும்பினான். முதுமை, பிணி, சாக்காடு ஆகிய மூன்றையும் விளக்கும் மூன்று காட்சிகளும் சேர்ந்து அவன் மனத்தில் ஒரு பெருஞ் சிந்தனையைக் கிளப்பிவிட்டன.

சித்தார்த்தனின் மனத்திற்குள்ளே ஒரு பெரும் புயல் உருவாகியது. மனிதராகப் பிறந்தவர்கள் இந்தத் துன்பங்களிலிருந்து தப்ப முடியாதா என்ற எண்ணம்தான் ஒவ்வொரு நாளும் அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. அதுவரை தானடைந்த இன்பங்களும் பெருமைகளும் சிறிதுநேரக் கனவுகள் போல மறைந்துபோய்விட்டதை அவன் உணர்ந்தான்.

சித்தார்த்தன் இந்த வேதனைக் காட்சிகளைக் கண்டது பற்றியும், பித்துப்பிடித்தவன் போல் அரண்மனையில் தன்னந்தனியே அன்னம் தண்ணீர் நாட்டமின்றி சிந்தனைவயப்பட்டு