பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

52

களையும் துறந்துவிட்டவன். இவனுக்கு பந்தம் பாசம் இன்பந் துன்பம் என்று எதுவும் கிடையாது. வயிறு பசிக்கும்போது தெருத் தெருவாகச் சென்று பிச்சை யெடுத்து உண்பான். வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் இவன் கவலைப்படுவது கிடையாது. ஆகவேதான் இவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்” என்று தேர்ப் பாகன் கூறினான்.

தேர்ப்பாகன் கூறிமுடிப்பதற்குள்ளாகச் சித்தார்த்தன் தேர்த்தட்டிலிருந்து கீழே குதித்தான். அந்தக் காவி கட்டிய துறவியின் அருகில் சென்று அவனைச் சில கேள்விகள் கேட்டான்,

துறவியோடு பேசியபின் அவன் தன் ஐயமெல்லாம் தீர்ந்ததுபோல் உணர்வு பெற்றான். தான் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அரசையும், அரண்மனை இன்பங்களையும் துறந்தாலன்றித் தான் மன அமைதி பெற முடியாதென்று அவனுக்குத் தோன்றியது.

அன்று அவன் கேளிக்கை மைதானத்துக்கு சென்றபோது மன அமைதியோடு இருந்தான். மலர்ந்திருந்த பூஞ்செடிகள் ஓர் இன்பத்தை