பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

இன்பநிலை கண்ட புத்தபிரான்

போல் தோன்றவில்லை. ஏதோ ஓர் இலட்சியத்திற்காகப் பிச்சை யெடுப்பவன் போலவே தோன்றினான்.

மன்னன் பிம்பிசாரன் தன் வேலையாட்களில் இருவரை அழைத்தான். பிச்சைக்காரனை சுட்டிக் காண்பித்தான். "அந்த ஆளை அவன் அறியாமல் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவன் எங்கு தங்குகிறான், என்ன செய்கிறான் என்று அறிந்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.

சில நாழிகைகளுக்குப் பிறகு அந்த வேலைக்காரர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் கூறிய செய்தி பிம்பிசாரன் எதிர்பார்த்தது போலவே யிருந்தது.

“அரசே, அந்தப் பிச்சைக்காரன் நகருக்கு வெளியே உள்ள கல் மலையடிவாரத்திலே நிழல் படர்ந்த ஓர் இடத்திலே உட்கார்ந்தான். தான் பிச்சை எடுத்துவந்த சோற்றைத் தன் எதிரிலே வைத்தான். அதை எடுத்துண்ணப்போகும் போது அவன் பார்வை அந்தச் சோற்றுக் குவியலிலே பதிந்தது. அந்தப் பிச்சைச் சோற்றைக் கண்டதும் ஏற்பட்ட அருவருப்பால் அவன்