பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

இன்பநிலை கண்ட புத்தபிரான்

அப்போது இறந்துபோய்விட்டனர். பின்னர் உருவேலங்காட்டில் தன் சீடர்களாகத் திரிந்த ஐந்து தவசிகளைத் தேடிச் சென்றா. அவர்களைக் காசித் தலத்தின் அருகிலே கண்டார். அவர்கள் மீண்டும் புத்த பெருமானைத் தங்கள் குருநாதராக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. பட்டினி கிடக்க முடியாமல் தவத்தைக் கைவிட்டவர் ஞானியாக முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. எடுத்த எடுப்பில் அவர்களுடைய மூடநம்பிக் கையை புத்தரால் அகற்ற முடியவில்லை. ஆனால், வேறு சிலருக்குத் தான் கண்ட புது உண்மைகளை அவர் விளக்கிக் கூறியபோது, அவர்களும் அறிவு விளக்கம் பெற்றனர்.

புத்தரின் முதல் சீடனாக இருக்கும் பெருமை பெற்றவன் யாசன் என்பவன். அவன் உண்மை விளக்கம் பெற்றவுடன் தன் செல்வங்களையெல்லாம் துறந்து புத்தர் பொன்னடிகளையே போற்றி அவரைப்பின்தொடர்ந்து திரிந்தான். புத்த சங்கத்தில் சேருபவர்கள் உலக இன்பங்களில் நாட்டம் செலுத்தக் கூடாது என்று புத்தர் கூறியிருந்தாலும், செல்வங்களைத் துறக்க வேண்டும் என்று கூறியதில்லை. இருந்தாலும், அவர் வழியைப் பின்பற்றிய பலரும்