பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

78

தங்கள் செல்வங்களைத் துறந்துவிட்டே வந்து சேர்ந்தார்கள்.

நாள்தோறும் புத்தபிரானின் அருள் உரைகளைக் கேட்டு அவர் வழியைப் பின்பற்ற முன்வந்தவர்களின் தொகை பெருகிற்று. ஒரு நாள், புத்தருக்கு பிம்பிசார மன்னனின் வேண்டுகோள் நினைவு வந்தது. உடனே ராஜகிருக நகரத்துக்குச் சென்றார். புத்தர் அறிவொளி பெற்றுத் திரும்பி வந்ததையறிந்த மன்னன் அவருடைய காலடியில் வீழ்ந்து வணங்கினான். தனக்குச் சொந்தமான ஒரு சிறு தோப்பைக் கொடுத்து அதில் புத்த பெருமான் தங்கியிருக்க வேண்டும் என்று அவன் கேட்டுக் கொண்டான். அவன் அன்பு வேண்டுகோளை ஏற்று இரண்டு மாதங்கள் புத்தர் அந்தத் தோப்பில் தங்கினார்.

புத்தர் அங்கு தங்கியது வீண் போகவில்லை. அரச குலத்திற் பிறந்த இரண்டு இளைஞர்கள் புத்தர் சங்கத்தில் சேர்ந்தார்கள். பின் நாளில் அவர்களே புத்த பிரானின் வலது கையாகவும் இடது கையாகவும் விளங்கினார்கள்.

புத்தர் அரண்மனையை விட்டுப் போன நாள் முதலாய் சுத்தோதனர் அடைந்த துயரமும் மனக் கவலையும் சொல்லும் அளவினதன்று.