பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

இன்பநிலை கண்ட புத்தபிரான்

“மகனே அரண்மனைக்கு வந்து விடு" என்று திரும்பத் திரும்ப அழைத்தார். பயன் கிட்டவில்லை.

பின் ஒரு நாள் தன் மகன் தெருத் தெருவாக பிச்சை எடுக்கின்றான் என்று கேள்விப்பட்டு ஓடோடிச் சென்றார். "வேண்டாமடா மகனே, வேண்டாம்! ஆளப்பிறந்த நீயா பிச்சை ஏற்பது?” என்று கேட்டுத் தடுத்து நின்றார். ஆனால், புத்த பிரான் அவர் அன்பழைப்பைப் பொருட்படுத்த வில்லை.

ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று யசோதரையைக் கண்டு புத்த பெருமான் ஆறுதல் கூறினார். பிறகு தன் குடிசைக்குத் திரும்பி விட்டார். அவர் துறவுக் கோலத்தை அகற்ற யசோதரை செய்த முயற்சிகளும் பயனற்றுப் போயின.

தன் மகன் ராகுலனை யசோதரை புத்த பெருமானிடம் அனுப்பினாள். “உன் அப்பாவைப் பார்த்து, 'அப்பா எனக்குப் பட்டம் சூட்டுங்கள்' என்று கேள்" என்று கூறியனுப்பினாள். புத்த பிரானோ, “நான் கண்ட இந்தத் தெய்வ அரசுக்கு உன்னை இளவரசனாகப் பட்டஞ் சூட்டுகிறேன்' என்று மனத்திற்குள் தீர்மானித்-