பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7

வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

பினான். அவன் கேட்ட அந்தக் கேள்வி சுத்தோதனருடைய உள்ளத்திலே பெருஞ் சிந்தனையை உருவாக்கியது. மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த அவருடைய மனத்திலே ஒரு கலக்கம் ஏற்பட்டது. அந்தக் கலக்கத்தின் பிரதிபலிப்பு அவருடைய அகன்ற நெற்றியிலே சுருக்கங்களாக வெளிப்பட்டது.

அந்தக் கேள்வியை வேறு யாரும் கேட்டிருந்தால், அரசர் ஆணை பிறப்பதற்கு முன்னாலேயே அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டிருப்பார்கள். ஆனால், கேட்டவர் மாமன்னருடைய கூடப் பிறந்த தம்பி என்பதால் யாரும் எவ்வித அசம்பாவிதமான செயலும் செய்யவில்லை. மேலும் அங்கு கூடியிருந்த உறவினர் எல்லோருக்குமே நெடுநாட்களாக அந்தக் கேள்வி மனத்திற்குள் உறுத்திக் கொண்டு நின்றது தைரியமிருந்திருந்தால் அவர்களே மாமன்னரைக் கேட்டிருப்பார்கள். அப்போது மாமன்னரின் தம்பியே கேட்டுவிட்டது கண்டு அவர்கள் மனத்திற்குள் திருப்தியடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

பலபேருடைய மனத்தை உறுத்திநின்ற ஒரு கேள்வியை எந்தனை நாளைக்குத்தான் மூடி