பக்கம்:தெய்வ மலர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

போக சொல்கிறேன்’ என்று நரியை மூடிவைத்தான். நரி போய் பத்திரமாகப் பதுங்கிக் கொண்டது. மீன்

கூடை அதை மூடிக் கொண்டிருந்தது.

நரிக்கோ நல்லபசி! மீன் கூடை வேறு தலைக்கு மேல் இருந்தது. நரிக்கு ஆசை வந்து விட்டது. மீன்களைத் தின்று பசியாறிக் கொள்ளலாம் என்று ஒவ்வொரு மீகைத் தின்ன ஆரம்பித்தது. ஒவ்வொன்ருகத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் விரட்டிக் கொண்டு வந்த வர்கள் தேடிக் கொண்டே ஓடி வந்தார்கள். பக்கத்து ஊர்க்காரன் ஒருவன் உட்கார்ந்து மீன் பிடிப்பதைப் பார்த்தார்கள். இந்தப் பக்கம் ஒரு நரி வந்ததா? என்று ராமன் கேட்டான். எதுவுமே இங்கு வரவில்லைஎன்று மீன் பிடிப்பவன் பொய் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெய்வ_மலர்.pdf/11&oldid=580284" இலிருந்து மீள்விக்கப்பட்டது